Site icon Tamil News

கறுப்பின பயணிகளை வெளியேற்றிய அமெரிக்க விமான சேவை – விமானிகளுக்கு நேர்ந்த கதி

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கறுப்பினப் பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகளிடம் இருந்து துர்நாற்றம் வருவதாக கூறி இவ்வாறு பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவ்வாறு செய்த விமானிகள் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்

ஜனவரி 5ஆம் திகதி இடம்பெற்ற அந்தச் சம்பவம் தொடர்பில் 3 பயணிகள் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தனர்.

மூவரும் கறுப்பின நபர்களாகும். விமானத்தில் அவர்கள் ஒன்றாக அமரவில்லை; அவர்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாது.

Phoenix நியூயார்க் நகருக்குச் செல்லவிருந்த விமானத்திலிருந்து அனைத்துக் கறுப்பின நபர்களும் வெளியேற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மொத்தம் 8 நபர்கள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பாகுபாடாக நடந்துகொள்கிறது என்ற அடிப்படையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த மூவருக்கும் அதே விமானத்தில் அதே இருக்கைகளில் அமர அனுமதி தரப்பட்டது.

நடந்த சம்பவத்துக்கு வருந்துவதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் இஸோம் (Robert Isom) கூறினார். கறுப்பினத்தவரின் பயண அனுபவத்தைக் கவனித்துக்கொள்ளும் சிறப்புக் குழுவை அமைக்கப் போவதாக அவர் கூறினார்.

ஏற்கனவே 2017ல் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தவிர்த்துவிடுங்கள், அது கறுப்பினத்தவரை மரியாதைக் குறைவாக நடத்துகிறது என்று சில சமூக உரிமைக் குழுக்கள் ஆலோசனை கூறியிருந்தன.

Exit mobile version