Site icon Tamil News

ஹார்முஸ் ஜலசந்தியில் இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்கும் அமெரிக்கா!

ஈரானிய தாக்குதல்களுக்கு எதிராக கப்பல்களை பாதுகாக்க ஹார்முஸ் ஜலசந்தி அருகே எஃப்-16 போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரானியப் படையெடுப்புகளில் இருந்து கடல் கப்பல்களைப் பாதுகாக்க F-16 போர் விமானங்களை அனுப்புவதன் மூலம் ஹார்முஸ் ஜலசந்தியின் மூலோபாய ஜலசந்தியில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை கணிசமாக அதிகரிக்கிறது எனவும் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கு முழுவதும் ரஷ்யா மற்றும் சிரியாவுடனான ஆகிய நாடுகளுடன் ஈரான் உறவுகளை வலுப்படுத்தி வருவதால்,பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அமெரிக்க ஹார்மூஸ் ஜலசந்தியில் தனது இராணுவ பிரசன்னத்தை கணிசமாக அதகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வார இறுதியில் வளைகுடா பகுதிக்கு F-16 போர் விமானங்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஒரு வாரத்திற்கும் மேலாக அப்பகுதியில் ரோந்து வரும் A-10 தாக்குதல் விமானத்திற்கு துணை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

அண்மையில் ஜலசந்திக்கு அருகாமையில் இரண்டு எண்ணெய் டேங்கர்களைக் கைப்பற்ற ஈரான் முயற்சித்த நிலையில், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து எஃப்-16 விமானங்கள் நீர்வழிப்பாதையில் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், பிராந்தியத்தில் இராணுவத்தின் பார்வையை அதிகரிக்கவும், மற்றும்  ஈரானின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குத் தடையாக செயல்படவும் தயாராக இருப்பதாக பாதுகாப்பு அதிகாரி மேலும் கூறினார்.

Exit mobile version