Site icon Tamil News

புதிய எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் திருத்தம்!

இலங்கைக்கும் –  புதிய எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் இரண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, எரிபொருள் விற்பனை மூலம் ஈட்டப்படும் பணம் தொடர்பாக திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அதாவது வருமானமாக பெறும் பணத்தை இலங்கை ரூபாயில் இருந்து அமெரிக்க டொலாராக மாற்றும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சப்ளையர்களுக்கு விதிக்கப்பட்ட 1% ராயல்டி கட்டணத்திற்கு பதிலாக ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாய் விதிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் இன்று (07.07) தெரிவித்தார்

இவ்விடயம் தொடர்பில் மேலும் விளக்கமளித்த விஜேசேகர, நுகர்வோருக்கு இரட்டிப்பு வரி விதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் அரசப்பணம் நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

Exit mobile version