Tamil News

அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியானது

அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிவடைந்தது.

நடிகர் அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் பத்தாம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் படபிடிப்பு தளத்தில் தொடங்கியது.

தேர்தல் நாள் அன்று மட்டும் விடுமுறை எடுத்த படக் குழுவினர், தொடர்ச்சியாக குட் பேட் அக்லி படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்நிலையில், திட்டமிட்டபடி முதற்கட்ட படப்பிடிப்பை பட குழுவினர் முடித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சென்னை திரும்பும் நடிகர் அஜித்குமார் விரைவில் ஆஜர் பைஜான் புறப்படுகிறார். அங்கு விடாமுயற்சியின் படப்பிடிப்பு ஜூன் 20ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதில் அஜித் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் படமாக்க விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி திட்டமிட்டு இருக்கிறார்.

நிதி சிக்கல் காரணமாக அவிடாமுயற்சி படபிடிப்பு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனமான லைகா திட்டமிட்டு இருக்கிறது.

Exit mobile version