Site icon Tamil News

ஜெர்மனியில் உதவி பணம் போதவில்லை – நபரின் அதிரடி நடவடிக்கை

ஜெர்மனியில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவி பணம் போதவில்லை என கூறி நபர் ஒருவர் நீதிமன்றம் சென்றுள்ளார்.

அதற்கமைய, குறித்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

ஜெர்மனியில் சமூக உதவி திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற சமூக உதவி பணமானது தனக்கு போதாது என்று சமூக உதவி பணத்தை பெறுகின்ற நபர் ஒருவர் மாநில சமூக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த நபர் தான் வழக்கு தொடர்ந்ததற்கான காரணத்தை குறிப்பிடுகையில் தனது மாதாந்தம் 845 யூரோ சமூக உதவி பணமாக வழங்கப்படுவதாகவும், இந்த பணமானது நாளாந்தம் வாழ்க்கை செலவு மற்றும் வீட்டு வாடகை மற்றும் எரி பொருட்களுக்கான செலவை செலவிட வேண்டியுள்ளதாகவும், இந்நிலையில் ஜெர்மனியில் தற்பொழுது பண வீக்கமானது 20.7 சதவீதமாக காணப்படுவதால் இவ்வாறு வழங்கப்படும் பணத்தில் வாழ்க்கை செலவை ஈடு செய்ய முடியாத நிலையை தெரிவித்து வழக்கை தொடர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றமானது, சமூக உதவி திணைக்களமானது 2021 மற்றும் 2022 காலங்களில் வழங்கிய பணமானது போதுமானது என்றும், சமூக உதவி திணைக்களம் செய்த நடைமுறையானது சட்டத்துக்கு விரோதமான செயற்பாடு அல்ல என்றும் சட்டத்தில் உள்ளடக்கபட்ட விடயத்தையே சமூக உதவி திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளது என தீர்ப்பு அளித்துள்ளது.

Exit mobile version