Site icon Tamil News

ஜுனியர் வைத்தியர்களின் வேலைநிறுத்தத்தால் ஆபத்தில் உள்ள 250,000 சிகிச்சைகள்!

இங்கிலாந்;தில் ஜுனியர் வைத்தியர்கள் அடுத்த வாரத்தில் நான்கு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் இங்கிலாந்தின் மருத்துவமனைகளில் 2 இலட்சத்து 50 ஆயிரம் நியமனங்கள், அறுவை சிகிச்சைகள் ஆபத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வுக் கோரி இங்கிலாந்தில் நீண்டகாலமாகவே வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாகவே வரும் செவ்வாய்க்கிழமையில் இருந்து ஏப்ரல் 15 ஆம் திகதிவரை வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்டப்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள என்.எச்.எஸின் தேசிய மருத்துவ இயக்குனர் பேராசிரியர் சர் ஸ்டீபன் போவிஸ், அடுத்த சுற்று வேலை நிறுத்தங்கள், இணையற்ற அளவிலான இடையூறுகளை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version