Tamil News

பிரபல ஹாலிவூட் நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு ; 13 ஆண்டுகள் கழித்து வெடித்த குண்டு

ஹாலிவூட்டில் பிரபல நடிகராக இருப்பவர் வின் டீசல் (56). பல ஆக்சன் படங்களில் நடித்த இவருக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் நடித்த தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ், எக்ஸ் எக்ஸ் எக்ஸ், ஃபாஸ்ட் ஃபைவ், அவெஞ்சர்ஸ் ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.

இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஃஹாலிவூட்டில்ஆண்டு ஃபாஸ்ட் ஃபை திரைப்படத்திற்கான செட்டில் உதவியாளராகப் பணிபுரிந்த அஸ்டா ஜானஸன் என்பவர் நடிகர்  வின் டீசல் தன்னைக் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள முயற்சித்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து பதியப்பட்டுள்ள இந்த வழக்கு அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், வின் டீசல் தரப்பிலிருந்து, ‘இது பொய்யானக் குற்றச்சாட்டு’ என மறுப்பு தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.

Exit mobile version