Site icon Tamil News

தேசபந்து தென்னகோனின் ரிட் மனுமீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு ஜீன் 26 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம்  கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ‘அறகலய’ எதிர்ப்பாளர்களால் கண்டெடுக்கப்பட்ட பெருந்தொகை பணம் குறித்து தேசப்பந்து தென்னகோனுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனுவை நிராகரிக்க உத்தரவிடுமாறு கோரி தேசப்பந்து தென்னகோன் ரிட் மனுவொன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த ரிட் மனுமீதான விசாரணை இன்று (23.06) நீதியரசர்களான நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே  தீர்ப்பை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து நீதியரசர்கள்  உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Exit mobile version