Tamil News

அப்பாவுக்கு விருது கொடுத்த மகள் – ராஜ்கமலுடன் கைகோர்க்கும் ஸ்ருதிஹாசன்

இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும், நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான சைமா விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதினை கமலின் மகள், அவரது தந்தைக்கு வழங்கி கௌரவித்தார்.

இந்த நிலையில் சைமா விருது வழங்கும் நிகழ்ச்சி மேடையில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகியாக களமிறங்கியவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

தமிழ் மொழியில் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தாலும் ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய இரு திரைத்துறையிலும் அவர் பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அங்கு இவர் முன்னணி நாயகியாக வலம்வருவதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாக தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான லாபம் திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

இந்த சூழலில் சைமா விருது வழங்கும் நிகழ்வில் பேசிய உலக நாயகன் கமல்ஹாசன்,

தனது ராஜ்கமல் நிறுவனம், ஸ்ருதிஹாசனுடன் ஒரு முக்கியமான ப்ராஜெக்ட்டில் இணைய உள்ளதாக கூறினார். அது ஒரு இசை ஆல்பம் என்பதை தற்போது உறுதிப்படுத்தி உள்ளார் நடிகை சுருதிஹாசன்.

Exit mobile version