Site icon Tamil News

அங்காடி தெரு நடிகை காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகினர்

அங்காடித் தெரு நடிகை சிந்து அதிகாலை 2.15 மணியளவில் காலமானார்.

மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் சிந்து. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அந்த சிகிச்சை மிகவும் கடினமாக இருப்பதாகவும், இறைவன் தன்னை அழைத்துக் கொள்ள வேண்டும் அல்லது நிம்மதியாக வாழ விட வேண்டும் என தெரிவித்து வந்தார் பல பேட்டிகளில் தன்னுடைய வேதனையை மற்றும் சிரமங்களை தெரிவித்து இருந்தார். அதேசமயம் சிலருக்கு உதவிகளையும் தன் செய்து வந்தார்.

அவருக்கு ஆரம்பத்தில் ஒருபுறம் மட்டும் மார்பகம் நீக்கப்பட்டு இருந்தது. இறுதியாக இரண்டு மார்பகங்களும் நீக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இரவு 2:15 மணியளவில் அவருடைய பலசரவாக்கம் அன்பு இல்லத்தில் காலமானார்.

அவரது உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அங்காடி தெரு சிந்துவின் இறுதிச் சடங்கு இன்று விருகம்பாக்கம் மின் மயானத்தில் நடைபெற உள்ளது.

Exit mobile version