Tamil News

நடிகை கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் ‘KFG’ நாயகன்… வெளியானது மாஸ் அப்டேட்

KGF படப்புகழ் நடிகர் யஷ், நடிகை கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் அடுத்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதன் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

கன்னட திரையுலகில் மட்டுமல்லாது இந்திய திரையுலகிலும் நீல் இயக்கத்தில் யஷ் நடித்திருந்த ‘KGF’ திரைப்படம் ஒரு புதிய சாதனையை படைத்தது. கன்னட சினிமாவையும் இந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைத்ததில் ‘KGF’ திரைப்படம் முக்கிய பங்கு வகித்தது. இந்த நிலையில், நடிகர் யஷ்ஷூக்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இவருடைய அடுத்த படம் குறித்து. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ‘KGF’ படத்தின் முதல் இரண்டு பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அடுத்த பாகமும் உருவாகும் என இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், யஷ்ஷின் அடுத்த படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Yash next movie after kgf chapter 2 geetu mohandas in contention to direct  rima kallingal statement

இந்த நிலையில், நடிகர் யஷ் நடிகை கீதா மோகன்தாஸ் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை கீர்த்தி, கமல்ஹாசனின் ‘நள தமயந்தி’ மற்றும் பாலச்சந்திரன் ‘பொய்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஏற்கெனவே மூன்று படங்களை இயக்கியுள்ள அவர், நடிகர் யஷ்-ஷை வைத்து இயக்கும் அவருடைய புதிய திரைப்படம் குறித்த தகவல் வருகின்ற டிசம்பர் 8ம் திகதி காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version