Tamil News

மீண்டும் தள்ளிப் போகும் தங்கலான் ரிலீஸ் திகதி.. அதுக்கு இப்படி ஒரு காரணமா?

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்தள்ளனர். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஜனவரியில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரலுக்கு தள்ளிப் போனது.

ஏப்ரல் 11ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நாளிலும் படம் ரிலீசாகாது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனவரி 26ம் தேதி படம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப் போனது.

ஏப்ரல் 11ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் சுதந்திர போராட்டக் காலத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் படம் ஏப்ரல் மாதத்திலும் ரிலீசாகாது என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலையொட்டி படத்தின் ரிலீசை மேலும் தள்ளி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தேர்தலை அடுத்து படம் ரிலீசானால் மக்களின் கவனம் முழுவதும் இந்தப் படத்தில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் அடுத்தடுத்து ரிலீஸ் தள்ளிப் போவது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படமும் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு ரிலீஸ் அறிவிக்கப்பட்டு பின்பு தள்ளிப் போகும் நிலையில் தற்போது அவரது அடுத்தப்படமான தங்கலான் படமும் அடுத்தடுத்து ரிலீஸ் தள்ளிப் போவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

முன்னதாக படத்தின் மேக்கிங் வீடியோ உள்ளிட்டவை வெளியாகி படத்திற்காக படக்குழுவினரின் உழைப்பை வெளிப்படுத்தியது. இந்நிலையில் படம் விரைவில் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version