Site icon Tamil News

ஜெர்மனி மக்களுக்கு பணம் வழங்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

ஜெர்மனியில் சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்காக மக்களிடம் இருந்து மேலதிகமாக வரி அறவிடப்பட்டு வருகின்ற நிலையில் மக்களுக்கு ஒரு தொகை பணம் வழங்கப்படவுள்ளது.

ஜெர்மன் அரசாங்கமானது க்லிமா கில்ட் என்று சொல்லப்படுகின்ற சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்காக மேலதிகமான வரி ஒன்றை 2021 ஆம் ஆண்டு முதல் அறவிட்டு வருகின்றது.

அதாவது co2 என்று சொல்லப்படுகின்ற கரிலமல வாயுவுக்காக ஒரு டன்னுக்கு 2024 ஆம் ஆண்டு 45 யூரோக்களை அறவிட உத்தேசித்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே இவ்வாறு 2021 இல் இந்த கரியமல வாயுவுக்காக அறவிடப்பட்ட பணத்தில் சிறு பகுதியை பொது மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கமானது தீர்மானித்து இருந்தது.

அதாவது 2024 ஆம் ஆண்டு வரை மொத்தமாக கரியமல வாயுவுக்காக மேலதிகமாக பெறுகின்ற பணமாக 11.4 பில்லியன் யூரோக்கள் கிடைக்கும் என கூறப்படுகின்றது.

இதேவேளையில் சில பகுதிகள் பொதுமக்களுக்கு பிரித்து வழங்கப்படும் என்றும், அதாவது ஒரு தனி நபருக்கு 2024 ஆம் ஆண்டு 139 யூரோக்கள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளையில் 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு அண்ணளவாக 500 யூரோக்களுக்கு மேலதிகமாக பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ஜெர்மனியின் தற்போதைய நிதி அமைச்சர் கிறிஸ்டியான லின் அவர்கள் இந்த பணத்தை எவ்வாறு வழங்குவது பற்றிய தொழில் முறை சார்ந்த சில நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து வருவதாகவும் தெரியவந்து இருக்கின்றது.

Exit mobile version