Site icon Tamil News

இராஜதந்திர நோக்கங்களுக்காக 3 தூதரகங்களை அமைக்க நடவடிக்கை!

ஈராக், ருமேனியா மற்றும் Cyprus  ஆகிய நாடுகளில் இராஜதந்திர நோக்கங்களுக்காக இலங்கை தூதரகங்கள் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

குறித்த நாடுகளில் அதிகளவான இலங்கையர்கள் இருப்பதனால் அவர்களைக் கவனித்துக் கொள்ள தூதரகங்கள் அமைப்பது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊலிசரள மற்றும் ஈராக்கில் உள்ள இலங்கை தூதரகங்கள் இதற்கு முன்னதாக செயற்பட்ட நிலையில் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று நாடுகளிலும் இலங்கை தூதரகங்களை அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து முன்னதாக ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த தூதரங்களை அமைப்பது தொடர்பில் பேச்சு வார்தைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர்இ அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version