Site icon Tamil News

தோட்ட தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்க நடவடிக்கை!

தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் காணி வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை  சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்படி பெருந்தோட்ட கைத்தொழில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சுற்றுலா மற்றும் காணி ஆகிய அமைச்சுகளுடன் இணைந்து அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய 250,000 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களில் 60,000 பேருக்கு காணி உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய குடும்பங்களுக்கான காணி உரிமையை உறுதிப்படுத்த 5,000 ஹெக்டேயர் தேவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனியார் தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை சுவீகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவை விரைவாகக் கொண்டு வருவதற்கு கட்சி பேதமின்றி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version