Site icon Tamil News

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் தென்மேற்கு பருவமழை!

நாட்டின் 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவமழை நாட்டின் பலப்பகுதிகளில்  பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று (07.09) காலை 08:30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பிரதேசத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அந்த அளவு 60 மில்லிமீற்றர் 05 பத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.

Exit mobile version