Site icon Tamil News

இலங்கையில் புதிய வகை கால்நடைகளை அடையாளம் காண நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் புதிய வகை கால்நடைகளை அடையாளம் காணும் ஆராய்ச்சியை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்காக பசு, ஆடு போன்ற விலங்குகள் இறக்குமதி செய்யப்பட்டாலும், அந்த விலங்குகள் நாட்டின் காலநிலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நோய்களுக்கு ஆளாவதால் இறக்கின்றன என்று திணைக்களம் கூறுகிறது.

எனவே இந்த நாட்டுக்கு ஏற்ற இரண்டு வகை மாடு மற்றும் ஆடுகளை அறிமுகப்படுத்தி பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகளை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இத்தகைய ஆய்வுகள் சுமார் 5-7 ஆண்டுகள் ஆகும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அண்மையில் பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் விவசாய அமைச்சர், இத்திட்டம் 5 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் இன்று பால் மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது என தெரிவித்தார்.

Exit mobile version