Site icon Tamil News

இலங்கையின் பிரபல சுற்றுலாத் தளத்தை மூடுவதற்கு நடவடிக்கை!

சிகிரியாவை சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குளவி கொட்டுக்கு இலக்கானதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று (14) பிற்பகல் குளவி தாக்கியதில் 26 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 13 உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சீகிரிய கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நாட்களில் அதிக வெயில் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் காணப்படுவதே குளவிகள் கிளப்புவதற்கு காரணம் என சுற்றுலா வழிகாட்டிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மத்திய கலாசார நிதியத்தின் சீகிரி திட்ட முகாமையாளர் துசித ஹேரத், குளவிகள் தாக்கிய நேரத்தில் சீகிரியாவை பார்வையிடுவதற்கு பயணச் சீட்டுகளை பெற்று உள்ளே செல்ல முடியாதவர்களின் பணத்தை மீள வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கின்றார். .

Exit mobile version