Site icon Tamil News

உலகளவில் அச்சுறுத்தும் குரங்கம்மை – கட்டுநாயக்க விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாடு முழுவதும் தொற்று தடுப்பு செயல்முறை பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலகளவில் குரங்கம்மை நோய் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால், குறித்த நோயாளர்களுக்காகக் கொழும்பு தொற்று நோய் நிறுவகத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் குரங்கு காய்ச்சல் நோயாளிகளைக் கண்டறிவதற்கான ஆய்வக வசதிகளை மேற்கொண்டுள்ளது.

நோய்க்கான சிகிச்சையளிப்பு தொடர்பாக தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையும் அனைத்து சுகாதார நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Exit mobile version