Site icon Tamil News

பிரான்ஸில் அபாயா தடை – ஜனாதிபதி மக்ரோன் வெளியிட்ட தகவல்

 

பிரான்ஸில் பல சர்ச்சைகளுடன் இந்த வாரம் புதிய கல்வி ஆண்டு ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில், பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை (அபாயா) அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் பெரும் விவாதமாக மாறியுள்ள இந்த தடை தொடர்பாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்து வெளியிட்டுள்ளார்.

“பாடசாலைகளில் மத அடையாளங்களுக்கு அனுமதி இல்லை. கல்வி நிலையங்களை, சமமாக நடத்தவும், ஜனநாயகத்தை மாணவர்கள் புரிந்துகொள்ளவும் நான் ஆதரவாக உள்ளேன்.

இதேவேளை, யாரையும் களங்கப்படுத்துவது நோக்கமல்ல. பாடசாலை வளாகம் சமமான ஒரு இடமாக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பிள்ளைகளும் பிரிவுகளை உணரக்கூட்டாது.

மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நாம் கட்டாயமாக இது தொடர்பாக புரிதல் ஏற்படுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version