Site icon Tamil News

அவுஸ்ரேலியாவில் பெண்ணின் மூளைக்குள் உயிருடன் வாழ்ந்த புழு!

ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது முதன்முறையாக ஒரு மனிதனின் மூளையில் உயிருள்ள புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நாட்டில் பணிபுரியும் இலங்கை மருத்துவர் ஒருவரால் இந்த சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.

64 வயதுடைய பெண் ஒருவரே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கான்பெராவில் நடந்த அறுவை சிகிச்சையின் போது அவரது முன் மூளையில் சேதமடைந்த திசுக்களில் சிவப்பு ஒட்டுண்ணி கண்டுபிடிக்கப்பட்டது.

8 செ.மீ நீளமுள்ள ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்ற வட்டப்புழு அவளது மூளைக்குள் சுமார் இரண்டு மாதங்களாக இருந்ததாக  கூறப்படுகிறது.

இந்த வகை ஒட்டுண்ணி பொதுவாக ஆஸ்திரேலிய விஷமில்லாத கம்பள மலைப்பாம்புகளின் உடலில் காணப்படுகிறது.

சமைக்காமல் மலைப்பாம்பு மலம் கலந்த இலையை சாப்பிட்டதால் ஒட்டுண்ணி முட்டைகள் அவரது உடலுக்குள் நுழைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

Exit mobile version