Site icon Tamil News

அமெரிக்காவில் அதிக வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச் சிற்பம்

தலைநகர் வாஷிங்டனில் வார இறுதியில் வெப்பம் அதிகரித்துள்ளதால், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் 6 அடி உயர மெழுகு சிலை உருகியுள்ளது.

6 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த மெழுகுச் சிலையின் தலைப்பகுதி வெப்பத்தால் உருகி கீழே வளைந்துள்ளது.

திறந்தவௌியில் வைக்கப்பட்டிருந்த ஆபிரகாம் லிங்கன் சிலையின் சேதமடைந்த தலைப் பகுதியை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆபிரகாம் லிங்கன் அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர்.

1860-இல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் அதிபராக வெற்றி பெற்றார். அவரை பெருமைப்படுத்தும் வகையில், வாஷிங்டனில் உள்ள கரிசன் ஆரம்ப பாடசாலை (Garrison Elementary School ) வளாகத்தில் 6-அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச் சிலை வடிவமைப்பட்டிருந்தது.

அவரது நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையை போலவே இந்த சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version