Site icon Tamil News

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தியாவில் இருந்து வீசிய காற்றின் தாக்கம் காரணமாக இலங்கையின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும் குறைவாக இருந்தது.

குருநாகல், கண்டி, கொழும்பு, யாழ்ப்பாணம், மொனராகலை, நுவரெலியா போன்ற மாவட்டங்களில் காற்றின் தரம் இவ்வாறு வீழ்ச்சியடைந்திருந்தது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் தரவுகளுக்கமைய நேற்று காலை 8.30 மணியளவில், குருநாகல் நகரத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, தூசி துகள்களின் அளவு (Pm 2.5) 275 ஆக மிக அளவை காட்டியது.

மேலும், அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண்ணுக்கமைய, கொழும்பு 07 மற்றும் கொள்ளுப்பிட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தின் தரம் குறைந்துள்ளது.

இதன்படி கொள்ளுப்பிட்டி பகுதியில் 107 ஆகவும் கொழும்பு 07 இல் 141 ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்த நிலைமை உடல் பலவீனமானவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version