Site icon Tamil News

வங்கக் கடலில் உருவாகும் புயலால் இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக மாறும் என்று இந்திய வானிலை  ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு உருவாகும் குறித்த புயலுக்கு ரீமல் என பெயரிடப்பட்டுள்ளது.

இப்புயல் எதிர்வரும் 26 ஆம் திகதி பங்களாதேஷ் அருகில் கரையை கடக்கலாம். அப்போது மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசக் கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

குறித்த புயல் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் தாக்கம் செலுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையின் அடுத்த 36 மணித்தியாலங்களில் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலையே நிலவக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version