Site icon Tamil News

கொழும்புக்கு வந்தது மிகப் பெரிய கொள்கலன் கப்பல்

மெத்தனால் மூலம் இயங்கும் உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் இன்று (24) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

“அன்னி மெர்ஸ்க்” என்ற சரக்குக் கப்பல் 16,000க்கும் அதிகமான கொள்கலன் கொள்ளளவைக் கொண்டுள்ளது.

Maersk இன் முதல் மெத்தனால் கப்பல் “Annie Maersk” ஜனவரி 26 அன்று முதல் முறையாக சரக்கு போக்குவரத்தில் இணைந்தது.

சுற்றுச்சூழலில் கந்தகம் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுவதால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்க மெத்தனால் அந்த கப்பல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் மனித ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதகமான விளைவுகளுடன் சுற்றுச்சூழலின் தாக்கத்தையும் குறைக்கிறது.

அதன்படி, கப்பலில் மெத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதற்காக 16,000 கன மீட்டர் அளவுள்ள இரண்டு தொட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.

தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல், டேனிஷ் கொடியுடன் சர்வதேச கடல் பகுதியில் பயணிக்கிறது.

இந்தக் கப்பல் 350 மீட்டர் நீளமும் 53.5 மீட்டர் அகலமும் கொண்டது. அந்த கப்பலில் சேமிக்கக்கூடிய 20 அடி கொள்கலன்களின் எண்ணிக்கை 16,592 ஆகும்.

இவ்வாறான கொள்கலன் கப்பல் இலங்கைக்கு வருவது இதுவே முதல் முறை என்பதுடன் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் விசேட கொண்டாட்ட நிகழ்வும் இடம்பெற்றது.

Exit mobile version