Site icon Tamil News

இரண்டு வயது குழந்தையை நீரில் மூழ்கடித்து கொல்ல முயற்சி… உதவி கோரியுள்ள பொலிஸார்

இரண்டு வயது குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து நபரொருவர் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் பொது மக்களிடம் உதவிகோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே புகைப்படத்தில் காணப்படும் நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் எங்கு இடம்பெற்றது என்பது தொடர்பில் தகவல் வெளிவராத நிலையில் சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளியினை கருத்திற்கொண்டு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

Exit mobile version