Site icon Tamil News

கையடக்க தொலைப்பேசிக்கு ஒரு இலட்சம் ரூபாய் வரி ! தேரரின் யோசனை!

கையடக்கத் தொலைபேசிக்கு ஒரு இலட்சம் ரூபாய்  வரி விதிக்கப்பட வேண்டுமென வணக்கத்துக்குரிய தினியாவல பாலித தேரர் முன்மொழிந்துள்ளார்.

பன்னிபிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  இன்றைய சமூக வீழ்ச்சிக்கு மொபைல் போன்களே முக்கிய காரணம்.

இன்று பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவும், கணவன் மனைவி உறவும் தொலைந்தும், சமூகத்துடனான உறவும் இல்லாமல் போய்விட்டது.

திருட்டு, குற்றம், பலாத்காரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அனைத்தும் இந்த மொபைல் போன் மூலம் எளிதாக்கப்படுகிறது.  அந்த மொபைல் போன்களை அகற்றவும். இல்லை என்றால் அனைவரும்   குறைந்தது ஒரு லட்சம் வரி செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version