Site icon Tamil News

சுற்றுலா சென்ற இடத்தில் சுவிஸ் இளம்பெண் செய்த தவறு ; கைது செய்த பொலிஸார்(வீடியோ)

இத்தாலியின் தலைநகரான ரோம் நகருக்கு சுற்றுலா சென்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண், புராதானச் சின்னம் ஒன்றை சேதப்படுத்தும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

சுற்றுலா வழிகாட்டி ஒருவர், ரோமிலுள்ள 4,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதானச் சின்னமான Colosseum என்னும் உலக அதிசயமாக விளங்கிய சுவரில் இளம்பெண் ஒருவர் ஏதோ கிறுக்குவதைக் கவனித்துள்ளார்.

அதை வீடியோவாக எடுத்த அவர், அந்த இளம்பெண்ணின் பெற்றோரிடம், அந்த இளம்பெண் செய்தது சட்ட விரோதச் செயல் என்று கூற, அவர்களோ, அவள் சின்னப்பிள்ளைதான், அவள் எந்த தவறும் செய்யவில்லை என்று பதிலளித்துள்ளார்கள்.

https://twitter.com/Agenzia_Ansa/status/1680263219594625026?s=20

ஆனால், இந்த சம்பவம் குறித்து இத்தாலி பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது. பொலிசார் அந்த இளம்பெண்ணையும், அவரது பெற்றோரையும் ரோமிலுள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.அந்த பெண்ணுக்கு, பெரும்தொகை அபராதம் அல்லது சிறைத்தண்டனை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version