Tamil News

ஜேர்மன் தொழிற்சாலை ஒன்றில் திடீரென நச்சு வாயுக் கசிவு: பலர் மருத்துவமனையில் அனுமதி…

உலகின் முன்னேற்றத்துக்கு தொழிற்சாலைகள் அவசியம் என்றாலும், அவற்றால் ஆபத்துக்கள் உள்ளதையும் மறுப்பதற்கில்லை. விடயம் என்னவென்றால், பல நாடுகளில் மக்கள் பயணிக்கும், பயன்படுத்தும் ரயில் நிலையங்களுக்கு அருகிலேயே இத்தகைய ரசாயன சேமிப்பகங்கள் உள்ளதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே அப்படி ஒரு ரசாயன சேமிப்பகம் இருப்பதே கவனத்துக்கு வருகிறது என்பது கவலைக்குரிய விடயம்.

நேற்று, தெற்கு ஜேர்மனியிலுள்ள Konstanz நகரில் அமைந்துள்ள ரசாயன ஆலை ஒன்றில், ரசாயனம் ஒன்று சேமித்துவைக்கப்பட்டிருந்த தொட்டியில், திடீரென நச்சு வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது.அதனால் தொழிற்சாலைக்குள் அந்த நச்சு வாயு பரவத் துவங்க, அதை சுவாசித்த தொழிலாளர்களுக்கு சுவாசப் பிராசினைகள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக 25 தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, அவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

Germany: Several hospitalized in Konstanz chemical leak – DW – 01/12/2024

வாயுக் கசிவு ஏற்பட்டதும், ஒரு பணியாளர் உடனடியாக பாதுகாப்பு உடை அணிந்துகொண்டு அந்த ரசாயனத் தொட்டியை forklift என்னும் சிறிய ட்ரக் மூலம் வெளியே கொண்டு சென்று, மக்கள் நடமாட்டம் இல்லாத திறந்தவெளியில் வைத்துவந்துள்ளார்.

துணிச்சலுடனும், சமயோகிதமாகவும் செயல்பட்டு அபாயத்தை கணிசமான அளவில் குறைத்த அந்த பணியாளருக்கு தீயணைப்புத்துறையினர் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.நடந்தது என்னவென்றால், திடீரென வெப்பநிலை உயர்ந்ததால், அந்த தொட்டியில் சேமிக்கப்பட்டிருந்த ரசாயனக் கலவையிலிருந்த இரண்டு ரசாயனங்கள், பயங்கர வேதிவினையில் ஈடுபட, அதனால் நச்சுவாயு உருவாகி கசியத் துவங்கியுள்ளது.அந்த பணியாளர் உடனடியாக அந்த ரசாயனத் தொட்டியை அங்கிருந்து அகற்றாவிட்டால் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version