Site icon Tamil News

துபாயிலுள்ள சிறிய மணல் பரப்பு $34 மில்லியன் டொலருக்கு விற்று சாதனை..!

துபாய் தீவிலுள்ள காலியான மணல் நிலமொன்று $34 மில்லியன் டொலருக்கு விற்று துபாய் சொகுசுத்தீவு சாதனை படைத்துள்ளது.

துபாய் நாட்டிலுள்ள ஒரு சொகுசுத்தீவில் 24500 சதுர அடி காலி நிலமானது, $34 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அதாவது கால்பந்து மைதானத்தின் பாதி அளவை கொண்ட மணல் நிலம், இவ்வளவு பாரிய விலைக்கு விற்கப்பட்டது துபாய் தீவின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

கடல் குதிரையின் வடிவத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த மணல் நிலம் துபாயின் ஆடப்பர தீவான ஜுமேரா பே தீவில் உள்ளது.இந்த நிலத்தை வாங்கும் நபர் தனது குடும்பம் விடுமுறை நாட்களில் தங்குவதற்காக, எல்லா வசதிகளையும் கொண்ட ஒரு சொகுசு இல்லத்தை உருவாக்க போவதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் நிறுவனமான ஃபாஸ்ட்-ஃபேஷனின் கூட்டாளி நிறுவனமான Pretty Little Thingன் நிறுவனர் உமர் கமானி இந்த மணல் நிலத்தை விற்றுள்ளார்.உமர் கமானி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு $10 மில்லியன் டொலர்கள் கொடுத்து இந்த நிலத்தை வாங்கியுள்ளார்.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, கமானிக்கு அதே போன்ற வேறு நிலம் உள்ளதாகவும், அதை அவர் $36.7 மில்லியனுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.ஜுமேரா பே ஆடம்பர தீவில் நிலத்தின் விலைகள் உயர்ந்தவை ஆகும், இந்த தீவில் முதலில் 128 ப்ளாட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. ஒப்பிடுகையில், மர வடிவ பாம் ஜுமேரா தீவில் ஆயிரக்கணக்கான வீடுகளும், உலகத் தீவுகளின் தீவுக்கூட்டத்தில் 300 வீடுகளும் அங்கு உள்ளன.

Exit mobile version