Site icon Tamil News

சிங்கப்பூரில் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த திட்டம்!

சிங்கப்பூரில் மிகவும் போட்டித்தன்மையுள்ள வேலைகளின் சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் இந்த சம்பளத்தை அதிகரிக்க 72 சதவீத முதலாளிகள் விரும்புவதாக ஆய்வில் கூறியுள்ளனர்.

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் நிலவரப்படி, பணியமர்த்துவது மிகவும் அல்லது ஓரளவு போட்டித்தன்மை மிக்கதாக இருந்ததாக 80 சதவீத நிறுவனங்கள் கண்டறிந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சம்பளம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளில் போட்டியிட முடியாததால் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் புதிய ஊழியர்களை பணியமர்த்துவதில் 10ல் நான்கு பேர் (39%) தவறியதாக சொல்லப்பட்டுள்ளது..

இருப்பினும், என்னதான் போட்டி இருந்தாலும் ஊழியர்கள் முக்கியம் என்ற அடிப்படையில், அடுத்த ஆறு மாதங்களில் ஊழியர்களை வேலைக்கு எடுக்க 43% சிங்கப்பூர் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

இந்த ஆய்வை திறன் சேவை நிறுவனமான மோர்கன் மெக்கின்லி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version