Site icon Tamil News

அமெரிக்காவில் பறந்துகொண்டிருந்த ஒரு பகுதி மாயம் – குழப்பத்தில் அதிகாரிகள்

அமெரிக்காவில் பறந்துகொண்டிருந்த United Airlines விமானத்திலிருந்து ஒரு பகுதி காணாமற்போனது எப்படி என விசாரிக்கப்பட்டு வருகின்றது.

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்ட போயிங் 737-800 விமானத்தில் 139 பயணிகளும் 6 சிப்பந்திகளும் இருந்தனர்.

ஓரிகான் (Oregon) மாநிலத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கிய விமானத்தில் சோதனை நடத்தப்பட்டபோது ஒரு பகுதியைக் காணவில்லை என்று அமெரிக்க விமானத்துறை நிர்வாகம் குறிப்பிட்டது.

விமானம் பறந்துகொண்டிருந்தபோது சேதம் ஏதும் ஏற்பட்ட அறிகுறி இல்லை என்று United Airlines நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், விமானத்தின் பகுதி எப்படிக் காணாமற்போனது என்பதை அமெரிக்க விமானத்துறை நிர்வாகம் விசாரிக்கிறது.

விமானம் மீது விரிவான சோதனை நடத்தப்படும். ஜனவரி மாதம் Alaska Airlinesஇன் போயிங் 737 MAX 9 விமானத்தின் ஒரு பகுதி தூக்கி எறியப்பட்டதால் அதை அவசரமாகத் தரையிறக்கப்படவேண்டியிருந்தது.

அதன்பின் அமெரிக்காவில் விமானங்கள் மீது அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. போயிங் நிறுவனத்தின் தரநிலைகள் குறித்த அக்கறைகளும் கூடியுள்ளன.

Exit mobile version