Site icon Tamil News

சுவிஸில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தடை : பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

சுவிஸ் பாராளுமன்றத்தின் கீழ் சபை செனட் சபையில் இனவெறி சின்னங்களை பயன்படுத்துவதையோ, அல்லது பொதுவில்  காட்சிப்படுத்துவதையோ தடைசெய்யும் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவு  பல ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை கடந்த பாராளுமன்ற அமர்வில் தோல்வி கண்டது.

பெரும்பாலான அரசியல் குழுக்கள் இந்த நடவடிக்கையை ஆதரித்துள்ளதுடன்,  இரு அவைகளிலும் அதிக இடங்களைக் கொண்ட வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியின் எதிர்ப்பை முறியடித்தன.

ஐரோப்பா முழுவதிலும் யூத எதிர்ப்புத் தாக்குதல்களின் எழுச்சியை அடுத்து, இந்த இந்த நடவடிக்கை  கொண்டுவரப்பட்டுள்ளது.

Exit mobile version