Site icon Tamil News

கனேடிய அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு

கனேடிய வரலாற்றில் முதன்முறையாக புதிய தற்காலிக குடியிருப்பாளர்களின் வருகைக்கு வரையறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லரினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனடாவின் இந்த நடவடிக்கை சர்வதேச மாணவர்களுக்கும், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் தஞ்சம் கோருபவர்களுக்கும் பொருந்தும் என மார்க் மில்லர் கூறியுள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை 5% ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வரையறை நிர்ணயிக்கப்படவுள்ளது.

கனடாவிற்கு வருகைத்தரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் “நிலையான” வளர்ச்சியை கட்டுப்படுத்துவதை உறுதி செய்வதே இதன் நோக்கம். என்றாலும், ஏற்கனவே நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு இதனால் பாதிப்புகள் ஏற்படாது என மார்க் மில்லர் கூறியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு மில்லியனாக காணப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டு 2.5 மில்லியனாக அதிகரித்துள்ளமை மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

Exit mobile version