Site icon Tamil News

தமிழ் பேசும் மக்களை கவர புதிய திட்டத்தை வகுக்கும் மலேசிய நிறுவனம்!

கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம், மலேசியாவில் ராமாயண பாதை சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்காக, மலேசிய இந்திய சுற்றுலா மற்றும் பயண சங்கத்துடன் (MITTA) ஒரு பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

200க்கும் மேற்பட்ட இந்திய-மலேசிய பயண மற்றும் சுற்றுலா நிறுவனங்களை உள்ளடக்கிய MITTA, தமிழ் பேசும் பயணிகள் மீது குறிப்பாக கவனம் செலுத்தி வெளியூர் மற்றும் உள்வரும் சுற்றுலாவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையின் உயர் ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் (ஓய்வு) சுமங்கலா டயஸ் MITTA பிரதிநிதிகளைச் சந்தித்து, ஜூலை 2024 இல் கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்துடன் (KLSICCI) முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

​​இலங்கையின் வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் ராமாயணத்துடன் தொடர்புடைய இந்து தெய்வங்களை காட்சிப்படுத்தும் ராமாயண பாதை பற்றிய வீடியோ ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளதுடன், மலேசிய ஏஜென்சிகள் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகளிடையே இந்த சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு MITTA வின் ஆதரவை உயர் ஸ்தானிகர் டயஸ் கோரியுள்ளார்.

MITTAவின் தலைவர் டத்தோ அருள்தாஸ், ராமாயணச் சுவடுகளை ஆராய்வதற்கான வாய்ப்பிற்காகப் பாராட்டு தெரிவித்தார் மற்றும் இந்திய-மலேசியப் பயணச் சமூகத்திற்குள் தேவையான தகவல்களைப் பரப்புவதில் MITTAவின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.

Exit mobile version