Tamil News

கொலைகார ட்ரோன்கள்- மத்தியகிழக்கு நாடுகளுக்கு விற்பனை செய்த சீனா!

தன்னிச்சையாக முடிவெடுக்கும் கொலைகார ரோபோக்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு சீனா விற்பனை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் இந்த கொலைகார ட்ரோன்களை உலகின் பல நாடுகள் மற்றும் ராணுவங்கள் வாங்கிக் குவிப்பதாக கூறப்படுகிறது. போர்க்களத்தில் இந்த ரோபோக்களை களமிறக்குவது, உண்மையில் கொடூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றே அஞ்சப்படுகிறது.

AI தொழில்நுட்பத்தில் செயல்படும் இந்த கொலைகார ரோபோக்கள் அல்லது ட்ரோன்களை மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா முதல் பர்மா வரையிலும், ஈராக்கு முதல் எத்தியோப்பியா வரையிலும் சீனா ஏற்றுமதி செய்துள்ளது.

Chinese killer robots sold to Middle East will leave 'every human dead' -  Daily Star

ஆனால் தற்போது சவுதி அரேபியா தொடர்பில் கடும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக சமீபத்தில் சீனாவின் இந்த கொலைகார ரோபோக்களை சவுதி முன்னெடுக்கும் கூட்டணி ஏமனில் களமிறக்க, இது கடந்த எட்டு ஆண்டுகளில் 8,000க்கும் மேற்பட்ட யேமன் குடிமக்களை கொன்றுள்ளது என தெரியவந்துள்ளது.

மேலும், IS தீவிரவாத குழுவினருக்கு எதிராக 260 ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்ததில், வெற்றி சதவீதம் 100 என்றே பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இந்த கொலைகார ட்ரோன் தொடர்பில் 2019ல் அவுஸ்திரேலிய ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.அதாவது அந்த ட்ரோன் தாக்குதலில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள இயலாமல் போகும் எனவும், தாக்குதல் ஆரம்பித்தவுடன், போர்க்களத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இறப்பதை அந்த ட்ரோன் உறுதி செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version