Site icon Tamil News

இலங்கை திறைசேரியின் அனுமதியின்றி செலவிடப்பட்ட பெருந்தொகையான பணம்!

ஊழியர்களுக்கு போனஸ் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளை வழங்குவதில் திறைசேரியின் அனுமதியின்றி இலங்கை முதலீட்டுச் சபை பணம் செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022ஆம் ஆண்டு தொடர்பான தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வருடத்தில் இலங்கை முதலீட்டுச் சபை திறைசேரியின் அனுமதியின்றி ஊழியர்களுக்கான போனஸ் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளுக்காக கிட்டத்தட்ட 61 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

போனஸ் கொடுப்பனவுகளுக்காக கிட்டத்தட்ட 07 கோடி ரூபாயும், ஏனைய கொடுப்பனவுகளுக்காக 54 கோடி ரூபாவிற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மேற்படி கொடுப்பனவுகள் தொடர்பில் திறைசேரியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த ஆண்டில், நிதி இராஜாங்க அமைச்சர், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் பங்குபற்றிய கலந்துரையாடல் இடம்பெற்ற போது, ​​கொடுப்பனவுகள் மற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version