Site icon Tamil News

பிரான்ஸில் இலங்கை தமிழருக்கு கிடைத்த மாபெரும் கௌரவம்!

பிரான்ஸில் சிறந்த பாண் தயாரிப்பாளர் என்ற விருதை பெற்ற இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தர்ஷன் செல்வராஜா ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி உலக வாழ் தமிழர்களுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.

பிரான்ஸில் வரும் நாட்களில் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதன் தொடக்கமாக ஏறக்குறைய 10,000 மக்கள் அதாவது விஐபிக்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திக் கொண்டு நாடு முழுவதும் கொண்டுச் செல்வார்கள்.

அந்தவகையில் இம்முறை நடைபெறும் ஒலிம்பிக்போட்டியில் ஒரு தமிழர் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்வது வரலாற்றில் இதுவே முதல் முறை. அந்த வாய்ப்பை இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தர்ஷன் செல்வராஜா பெற்றுள்ளார்.

யார் இந்த தர்ஷன்  செல்வராஜா?

பிரான்ஸில் பகெட் என்னும் பாண் வகை மிகவும் பிரபலம். பாரிசில் சிறந்த பாணை யார் உற்பத்தி செய்கிறார்கள் என்பதை தெரிவு செய்வதற்காக போட்டி இடம்பெறுவது வழமை.

அந்தவகையில் கடந்த 30 ஆண்டுகளாக இந்த போட்டி அங்கு நடைபெற்று வருகிறது. குறித்த போட்டியில் கலந்தகொண்டு வெற்றிவாகை சூடியவர் தான் தர்ஷன் செல்வராஜ்.

இவர் உற்பத்தி செய்த அந்த பகெட் பாண், பிரான்ஸின் ஜனாதிபதி மாளிகைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையை பூர்விகமாக கொண்ட 37 வயது தர்‌ஷன் செல்வராஜா கடந்த 2006 ஆம் ஆண்டு பிரான்ஸில் குடியேறினார். அங்கு ஒரு பேக்கரியில் பணியாற்றிய அவர், பின்பு சொந்தமாக ஒரு பேக்கரியை நிறுவி பாண் விநியோகித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் கடந்த 2023 இல் சிறந்த பாண் தயாரிப்பாளராக தெரிவு செய்யப்பட்டு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமையை தேடி தந்துள்ளார்.

ஒரு சாதாரண பேக்கரியாளராக பிரான்ஸிற்குள் அடியெடுத்து வைத்த அவர், தற்போது அங்கு அதிபர் மாளிகைக்கு விற்பனை செய்யும் வகையில் முன்னேறி இருப்பது அனைவருக்கும் பெருமையை தேடி தந்துள்ளது.

Exit mobile version