Tamil News

அமெரிக்காவில் மகனின் ரத்தத்தை தன்னுள் செலுத்தி தன் வயதை குறைக்கும் பிரபல தொழிலதிபர்

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் ஒருவர், தனது சொந்த மகனின் ரத்தத்தை தனக்குள் செலுத்தி, தனது வயதை குறைத்து கொள்ள முயல்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல பணக்காரரான பிரையான் ஜான்சன் என்பவர், தனது வயதை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.45 வயதான இவர் அல்ரா வெல்த்தி என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருவதன் மூலம், பிரபல தொழிலதிபராக அமெரிக்கா முழுவதும் அறியப்படுகிறார்.

ஜான்சன் முதலில் தன் உடலை வயது குறைவானர்களின் உடலாக மாற்றிக் கொள்ள, சில ஆரோக்கியமான இளைஞர்களின் ரத்த பிளாஸ்மாக்களை தானமாக பெற விண்ணப்பித்திருந்தார்.ஆனால் மற்றவர்களில் உடலிலிருந்து பெறப்படும் ரத்தம், தேவையற்ற ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.இதனை தொடர்ந்து பிரையான் ஜான்சன் தனது 17 வயது மகனின் ரத்தத்தை பெற்று, உயர்தர இயந்திரங்களை பயன்படுத்தி ரத்தத்திலிருக்கும் பிளாஸ்மா, வெள்ளை அணுக்கள் மற்றும் சிவப்பு அணுக்கள் என பிரித்தெடுத்துள்ளார்.

மகனின் ரத்தத்தை உடலில் செலுத்தி தன் வயதை குறைக்கும் பிரபல தொழிலதிபர்!

இந்த முயற்சியில் பிரையான் 70 வயதான தன்னுடைய தந்தையையும் இணைத்து கொண்டு, முக்கோண முறையில் ரத்த பரிமாற்றம் செய்துள்ளார்.முதலில் பிரையான் உடலிலிருந்து ரத்தங்கள் எடுக்கப்பட்டு, அவரது தந்தைக்கு செலுத்தப்படுகிறது. பின்னர் தனது 17 வயது மகனின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்களை தன்னுடைய ரத்தத்தில் செலுத்தி கொள்கிறார்.

இப்படி செலுத்துவதன் மூலம், உடலில் ரத்த செல்கள் இளமையடைவதோடு, தோல்கள் மற்றும் தசைகள் இளைஞரை போல தோற்றம் பெற முடியும் என நம்பப்படுகிறது.ஆனால் இவ்வாறு செய்வதன் மூலம், உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை குறைவதோடு, உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.மேலும் இந்த சிகிச்சைக்காக ஜான்சனின் 17 வயது மகனின் ரத்தத்தில் 20% எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஜான்சன் தனது மகனோடு, நின்றிருப்பதை போன்று புகைப்படத்தை வெளியிட்டு ‘ நான், எனது தந்தை மற்றும் மகனோடு இணைந்து பல தலைமுறை பிளாஸ்மா பரிமாற்றத்தை செய்துள்ளோம்’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version