Site icon Tamil News

ராஜகிரிய பகுதியில் சிசு ஒன்றின் சடலம் மீட்பு

ராஜகிரிய மதின்னாகொட பாலத்திற்கு அருகில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சடலம் இருந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ரத்தக்கறைகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

அளுத்கடை நீதிமன்ற இலக்கம் 4 மேலதிக நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்.

அதன் பின்னர் சிசுவின் சடலம் கொழும்பு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version