Site icon Tamil News

அமெரிக்காவில் தாயை காப்பாற்ற தன் உயிரை விட்ட மகள்

அமெரிக்காவில் தாயை காப்பாற்ற தன் உயிரை விட்ட மகள் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் ஏஞ்சலினா டிரான் (வயது 21) இவர் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தனது தாயுடனும், தாயின் இரண்டாவது கணவர் கியெப் உடனும் வாழ்ந்து வந்தார்.

கடந்த வருடம் வரை கியெப் வியட்நாவில் வாழ்ந்து வந்த நிலையில், சென்ற வருடம் தான் அமெரிக்காவிற்கு வந்திருந்தார்.

இவரது தாய்க்கும் மாற்றான் தந்தைக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால் அவரது தாய் இரண்டாம் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற முயற்சி செய்தார்.

இந்நிலையில் திடீரென ஒரு நாள் தாயுடன் வாக்குவாதத்தில் மாற்றான் தந்தை ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் தாயை கடுமையாக அவரது இரண்டாவது கணவர் சரமாரியாக தாக்கியுள்ளார்.

அப்போது அறையில் தூங்கிக் கொண்டிருந்த டிரான் சத்தம் கேட்டு வெளியே வந்து தாயை உடனடியாக காக்க முயன்றார். இதனை அடுத்து ஆத்திரமடைந்த கியெப் ஒரு கத்தியை எடுத்து டிரான் உடலில் சரமாரியாக பலமுறை குத்தியதில் சுமார் 107 கத்தி குத்துகள் டிரான் மீது விழுந்தன.

இதனால் டிரான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். பின்னர் டிரான் தாய் இது குறித்து அமெரிக்காவின் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலின் பெயர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்தியுடன் நின்றிருந்த கியெப்யை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version