Site icon Tamil News

எக்ஸ்பிரஸ் கப்பல் குறித்த விசாரணைக்கு திகதியிடப்பட்டது!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறு கோரிய வழக்கை ஒக்டோபர் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்க்பபட்டுள்ளது.

இது குறித்த உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.  சுற்றாடல் ஆர்வலர் கலாநிதி அஜந்த பெரேரா மற்றும் பலர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்தால், நாட்டின் கடற்கரை மற்றும் அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்புக்கு கடுமையான சேதம் ஏற்பட்டதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

மேலும், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மற்றும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட சேதம் 6.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் மனுவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் நிறுவனமும் தொடர்புடைய காப்புறுதி நிறுவனங்களும் இதுவரை நட்டஈட்டை செலுத்தத் தவறியுள்ளதால், நட்டஈட்டை வழங்குவதற்கு உரிய தரப்பினருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Exit mobile version