Site icon Tamil News

பிரான்ஸில் கடந்த மூன்று வருடங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம்

பிரான்ஸில் கடந்த மூன்று வருடங்களின் பின்னர் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 1.9% சதவீதமாக உள்ளது.

கடந்த மூன்று வருடங்களில் முதன்முறையாக பணவீக்கம் 2% சதவீதத்துக்கு கீழே வீழ்ச்சியடைந்துள்ளது.

அதை அடுத்து பொருட்களின் விலை வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் 2% சதவீதமாக இருந்த பணவீக்கம், அதன் பின்னர் சடுதியாக உயர்ந்து 7% சதவீதம் வரை உயர்ந்திருந்தது.

INSEE நிறுவனம் இத்தகவல்களை இன்று வெளியிட்டுள்ளது.

Exit mobile version