Site icon Tamil News

கிரீஸ் நாட்டில் புயலில் சிக்கி சரக்கு கப்பல் கவிழ்ந்தது விபத்து

கிரீஸ் நாட்டில் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் இருந்து இஸ்தான் புல்லுக்கு 6 ஆயிரம் டன் உப்புகளை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கப்பல் லெஸ்போஸ் தீவு அருகே கடும் புயலில் சிக்கி கப்பல் கடலில் கவிழ்ந்தாக தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த கப்பலில் 8 எகிப்தியர்கள், 4 இந்தியர்கள், 2 சீரியாவைச் சேர்ந்தவர் என 14 பேர் இருந்துள்ளனர். இதில் எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பியதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மாயமான 12 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இப்பகுதியில் மணிக்கு 80 கிமீ (50 மைல்) வேகத்தில் வடமேற்கு காற்று வீசுவதாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.

Exit mobile version