Site icon Tamil News

Titan நீர்மூழ்கிக் கப்பலின் வெடிப்பு – அமெரிக்கா வெளியிட்ட முக்கிய தகவல்

Titan நீர்மூழ்கிக் கப்பலின் வெடிப்பை அமெரிக்கக் கடற்படை கண்டறிந்ததாக தெரியவந்துள்ள

நீர்மூழ்கிக் கப்பல் காணாமற்போன சிறிது நேரத்தில் கடலடி ஒலிக் கண்காணிப்பு அமைப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்தது.

அந்த ரகசிய ஒலிக் கண்காணிப்பு அமைப்பு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பல் காணாமற்போன சிறது நேரத்தில் வெடிப்பு பதிவானதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்கக் கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பதிவின் தரவுகளை ஆராய்ந்ததில் அது ஒரு வெடிப்பைக் குறிக்கும் விதத்தில் இருந்ததாக அந்த அதிகாரி கூறினார்.

Titan நீர்மூழ்கிக் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திலிருந்து அந்தப் பதிவு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version