Site icon Tamil News

அம்பலாந்தோட்டையில் முதலைக்கு இரையான 75 வயதான பெண்

அம்பலாந்தோட்டை, புஹுல்யாய பிரதேசத்தில் வளவ ஆற்றுக்கு குளிப்பதற்குச் சென்ற 75 வயதுடைய பெண் ஒருவர் ஆற்றங்கரையிலிருந்து முதலையால் தாக்கப்பட்டுள்ளார்.

ஆற்றங்கரையில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியையான பெண் வழமை போன்று பிற்பகல் குளிப்பதற்குச் சென்றிருந்த வேளையில் முதலையால் தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை பார்த்த மக்கள் அலறியடித்தும், மீட்பு படையினரால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

இதையடுத்து உயிரிழந்தவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

Exit mobile version