Site icon Tamil News

கப்பலில் இருந்து இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ள 98 கொள்கலன்களில் அழுகிய மீன்கள்

சீஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கப்பலில் இருந்து அழுகிய மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்கள் நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.

இவை இயற்கை உரங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக கூறி தரையிறக்கப்பட்டுள்ளன.

கப்பலை இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கை பிரதிநிதிக்கு சொந்தமான செமண் தொழிற்சாலை உள்ளதாகவும், கப்பலில் இருந்த கெட்டுப்போன மீன்கள் அடங்கிய 04 கொள்கலன்களுக்கு என்ன நடந்தது என தெரியவரவில்லை எனவும் அந்த குழுவில் மேலும் தெரியவந்துள்ளது.

கப்பலை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும், மீன் கழிவுகளுக்காகவே இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் டி.டி உபுல்மலி பிரேமதிலக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி விடயத்திற்குரிய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அரச கணக்குகள் பற்றி குழுவின் தலைவரான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்

Exit mobile version