Site icon Tamil News

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள 625,000 குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர்

பைபர்ஜாய் சூறாவளி காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சுமார் 625,000 குழந்தைகள் அவசர நிலையில் இருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பாகிஸ்தானின் கடுமையான வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சிந்து மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் பைபர்ஜாய் புயல் காரணமாக இந்த முறை புதிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்று யுனிசெப்பின் தெற்காசிய பிராந்திய இயக்குனர் நோலா ஸ்கின்னர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பைபர்ஜாய் புயல் வருவதற்கு முன்னர் பெய்த கடும் மழை காரணமாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 02 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சுமார் 180,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சூறாவளியுடன் கட்டிடங்கள், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version