Site icon Tamil News

இங்கிலாந்து விற்பனையாளர்களிடமிருந்து திரும்பப் பெறப்படும் 6 வகை சாக்லெட்டுக்கள்!

இங்கிலாந்து முழுவதும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள 6 சாக்லெட் வகைகளை திரும்பப் பெறுவதாக உலகப் புகழ்பெற்ற கேட்பரி நிறுவனம் அறிவித்துள்ளது.

பாக்டீரியா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லிஸ்டீரியோ தொற்று எனப்படும் உணவு மூலம் பரவும் பாக்டீரியா, அசுத்தமான உணவை உட்கொள்வதால் ஏற்படுகிறது.

இதனால் கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டால் மிகவும் ஆபத்து என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கேட்பரியின் தயாரிப்புகளில் லிஸ்டீரியாசிஸ், காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோய்களை ஏற்படுத்தக் கூடும் என்ற அபாயம் ஏற்பட்டதால், ஆறு சாக்லெட் வகைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

அதேவேளை இந்த சாக்லெட்டுக்களை யார் வாங்கியிருந்தாலும் சாப்பிடாமல் வாங்கிய இடத்திலே ஒப்படைத்து மீண்டும் பணம் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

36

Exit mobile version