Site icon Tamil News

மக்ரோனின் ஓய்வூதிய மசோதாவுக்கு எதிராக பிரான்ஸ் எதிர்ப்பாளர்கள் பேரணியில் மோதல்

பிரான்ஸ் – ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது ஓய்வூதிய பிரேரணைக்கு  எதிரான பொதுமக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதால், பாதுகாப்பு தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று இதேபோன்ற  ரென்ஸ், போர்டோக்ஸ் மற்றும் துலூஸ் உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் பேரணிகளில் மோதல்கள் வெடித்தன, நான்டெஸில் ஒரு வங்கிக் கிளை மற்றும் கார்கள் எரிக்கப்பட்டன.

இருப்பினும், பொதுமக்களின் விரக்தியானது பரந்த மேக்ரோன் எதிர்ப்பு உணர்வாக உருவெடுத்திருந்தாலும், கடந்த வாரத்தை விட வன்முறை குறைவாக பதிவாகியுள்ளதாகவும், பேரணிகள் பெரும்பாலும் அமைதியானதாகவே இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version